Skip to content

Azhagiya Laila Song Lyrics

    Azagiya Laila (From “Ullathai Alli Thaa”). Mano. Sangeetha Utsavam – Mano Isai Mazhai.

    Azhagiya Laila Song Lyrics

    ஆண் : { அழகிய லைலா
    அவள் இவளது ஸ்டைலா
    சந்தன வெயிலா இவள்
    மன்மத புயலா

    ஆண் : அடடா பூவின்
    மாநாடா ஓ ஓ ஓ ஓ
    அழகுக்கு இவள்தான்
    தாய் நாடா………… } (2)

    ஆண் : ……………………….

    ஆண் : ஏ சிறகென
    விரித்தாள் கூந்தலை
    இங்கே சூரிய நிலவாய்
    ஆனது அங்கே

    ஆண் : என் மனம் இன்று
    போனது எங்கே மன்மதனே
    உன் ரதி எங்கே

    ஆண் : கன்னத்தை தொட்டால்
    சந்தனம் கொட்டும் வெட்கத்தை
    தொட்டால் குங்குமம் கொட்டும்

    ஆண் : புன்னகை பட்டால்
    மல்லிகை மொட்டும்
    பார்த்தால் பருவம் மூச்சு
    முட்டும்

    ஆண் : காலடி ஓசைகள்
    கம்பனை கேட்டது
    அம்மம்மா

    ஆண் : பிக்காசோவின்
    ஓவியம் ஒன்று பீத்தோவனின்
    சிம்பனி ஒன்று பெண்ணாய்
    மாறியதோ

    ஆண் : அந்தப்புரத்து
    மகராணி ஓ ஓ ஓ ஓ
    அந்தப்புரத்து மகராணி

    ஆண் : அழகிய லைலா
    அவள் இவளது ஸ்டைலா
    சந்தன வெயிலா இவள்
    மன்மத புயலா

    ஆண் : அடடா பூவின்
    மாநாடா ஓ ஓ ஓ ஓ
    அழகுக்கு இவள்தான்
    தாய் நாடா……

    ஆண் : உயிருக்குள்
    மின்னல்கள் அடித்ததென்ன
    தாகங்கள் என்னை குடித்ததென்ன
    அழகில் என்னை வளைத்ததென்ன
    இதயம் கொள்ளை போனதென்ன

    ஆண் : ரகசியமாய் இவள்
    இளமையை ரசித்தேன்
    கவிதைகள் எழுதி
    மனசுக்குள் படித்தேன்

    ஆண் : கனவுகள் அடுக்கி
    காலையில் கலைத்தேன்
    தினம் தினம் இவளை
    யோசித்தேன்

    ஆண் : வாலிப குறும்புகள்
    ஜாடைகள் சொல்லுது
    அய்யய்யோ பூக்கள் அவளை
    பார்த்து பார்த்து ஆட்டோகிராப்பை
    கேட்டு கேட்டு கைகள் நீட்டியதோ

    ஆண் : அந்தப்புரத்து
    மகராணி ஓ ஓ ஓ ஓ
    அந்தப்புரத்து மகராணி

    ஆண் : அழகிய லைலா
    அவள் இவளது ஸ்டைலா
    சந்தன வெயிலா இவள்
    மன்மத புயலா

    ஆண் : அடடா பூவின்
    மாநாடா ஓ ஓ ஓ ஓ
    அழகுக்கு இவள்தான்
    தாய் நாடா……

     

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *