Skip to content

Mudhal Nee Mudivum Nee Song Lyrics

    Mudhal Nee Mudivum Nee Title Track is sung by Darbuka Siva and Sid Sriram. What is the duration of Mudhal Nee Mudivum Nee Title Track.

    Mudhal Nee Mudivum Nee Title Track Song Lyrics

    ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ….
    குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
    ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
    ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..
    குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
    ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
    ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..

    ஆண் : முதல் நீ முடிவும் நீ
    மூன்று காலம் நீ…
    கடல் நீ கரையும் நீ
    காற்று கூட நீ……

    ஆண் : மனதோரம் ஒரு காயம்
    உன்னை எண்ணாத நாள் இல்லையே
    நானாக நானும் இல்லையே

    ஆண் : வழி எங்கும் பல பிம்பம்
    அதில் நான் சாய தோள் இல்லையே
    உன் போல யாரும் இல்லையே

    ஆண்கள் : தீரா நதி நீதானடி
    நீந்தாமல் நான் மூழ்கி போனேன்
    நீதானடி வானில் மதி
    நீயல்ல நான்தானே தேய்ந்தேன்

    ஆண் : பாதி கானகம்
    அதில் காணாமல் போனவன்
    ஒரு பாவை கால் தடம்
    அதை தேடாமல் தேய்ந்தவன்

    ஆண் : காணாத பாரம் என் நெஞ்சிலே
    துணை இல்லா நான் அன்றிலே
    நாளெல்லாம் போகும் ஆனால் நான்
    ஆண்கள் : உயிர் இல்லாத உடலே…

    ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ….
    குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
    ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
    ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..
    குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
    ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
    ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..

    ஆண் : முதல் நீ முடிவும் நீ
    மூன்று காலம் நீ…
    கடல் நீ கரையும் நீ
    காற்று கூட நீ…..

    ஆண் : தூர தேசத்தில்
    தொலைந்தாயோ கண்மணி
    உனை தேடி கண்டதும்
    என் கண்ணெல்லாம் மின்மினி

    ஆண் : பின்னோக்கி காலம் போகும் எனில்
    உன் மன்னிப்பை கூறுவேன்
    கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்
    ஆண்கள் : பிழை எல்லாமே கலைவேன்

    ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ….
    குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
    ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
    ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..
    குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
    ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
    ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..

    ஆண் : முதல் நீ முடிவும் நீ
    மூன்று காலம் நீ…
    கடல் நீ கரையும் நீ
    காற்று கூட நீ…

    ஆண் : நகராத கடிகாரம்
    அது போல் நானும் நின்றிருந்தேன்
    நீ எங்கு சென்றாய் கண்ணம்மா
    அழகான அரிதாரம்
    வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்
    புன்னைகைக்கு போதும் கண்ணம்மா

    ஆண்கள் : நீ கேட்கவே என் பாடலை
    உன் ஆசை ராகத்தில் செய்தேன்
    உன் புன்னகை பொன் மின்னலை
    நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்

    ஆண் : முதல் நீ……நீ…..
    முடிவும் நீ……ஈ…..ஈ….

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *